தியாகத்திரு நாள் , குர்பானியின் சட்டங்களும் விதிமுறைகளும் .

  1.  தியாகத் திருநாள் நினைவுகள், குர்பானியின் சட்டங்களும்  விதிமுறைகளும்.


சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் நபி இப்றாகிம் (அலை) அவர்களுக்கு அவரின் என்பதாவது வயோதிகப் பருவத்தில் நபி இஸ்மாயில் (அலை) அவர்கள் பிறந்தார்கள்.


பின்னால் ஒரு சோதனைக்காக அல்லாஹ் நபி இப்றாகிம் (அலை) அவர்களிடம் "அவரின் அருமை மனைவியார் ஹாஜரா அலை) அவர்களையும் பச்சிளம் குழந்தை நபி இஸ்மாயில் (அலை) அவர்களையும் மனித சஞ்சாரமற்ற மக்கா பாலைவனத்தில் விட்டு விட்டு வரும்படி" கட்டளையிட்டார். நபி இப்றாகிம் (அறை) அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.


சிறிது காலத்திற்குப் பின் மேலும் அவர்களை சோதிக்க நாடிய அல்லாஹ். ஏழு வயதைக் கடந்த பாலகர், செல்வப் புதல்வர் தவமிருந்து பெற்ற மகன் நபி இஸ்மாயில் (அலை) அவர்களை தனக்காக (அல்லாஹ்விற்காக) அறுத்துப் பலியிடும்படி கனவின் மூலம் நபி இப்றாகிம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான்.


மூன்று முறையும் ஒரே விதத்தில் கண்ட கனவை அது அல்லாஹ்வின் உத்திரவு தான் எனப் புரிந்து கொண்ட நபி இப்றாகீம் (அலை) அவர்கள் அதைப் பற்றி தம் இளம் மகன் நபி இஸ்மாயில் (அலை) அவர்களஎடுத்துக் கூறி புரியவைத்து அவரின் சம்மத்துடனும் (அல்லாஹு அக்பர் ) அவரை அல்லாஹ்விற்காக அறுத்துப் பலியிட துணிந்து முனைந்தார்கள்.

தந்தை மகன் ஆகிய அந்த இருவரின் உயர் தியாகச் செயலைப் பார்த்த அல்லாஹ் அவருக்குப் பகரமாக நல்லதொரு ஆட்டுக்கிடாயை அல்லாஹ்விற்காக பலியிடச் செய்து அவரை அந்தத் தியாகச் செயலிலிருந்து விடுவித்தான்.

அதையே வருடந்தோறும் ஈதுல் அள்ஹா பெருநாளாக நாம் கொண்டாடி வருகிறோம். குர்பானி பிராணியை அல்லாஹ்விற்காக அறுத்துப் பலியிடும் போது அந்த இரத்தத் துளி பூமியில் விழும் முன்பே குர்பானி கொடுத்தவரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன என்பது நபி மொழியாகும்.


தக்பீர் தஷ்ரீக்


துல்ஹஜ் மாதம் பிறை 9, பஜ்ர் தொழுகையிலிருந்து பிறை 13 ஆம் நாள் அஸர்தொழுகை வரை ஒவ்வொரு பர்லான தொழுகைக்குப் பிறகு ஒரு முறை தக்பீர் சொல்வது வாஜிப் (கடமை) ஆகும். 3 முறை சொல்வது சுன்னத்து ஆகும்.

தக்பீர் சொல்லும் முறை

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து.


 குர்பானியின் நிய்யத்


“அல்லாஹ்விற்காக இந்த குர்பானி பிராணியை அறுத்துப் பலியிடுகிறேன்.


குர்பானியை எப்போது  நிறைவேற்ற  வேண்டும்?


இறைவன் கூறுகிறான்  எனவே உம்

இறைவனுக்கு நீர் தொழுது குர்பானியும்

கொடுப்பீராக"

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக பராஃ இப்னு ஆஸிப்(ரழி) அவர்கள். அறிவிக்கிறார்கள்,-

உங்களில் யாரும் பெருநாள் தொழுகையை நிறைவேற்றாத வரை கண்டிப்பாக அறுக்க  வேண்டாம் [திர்மிதீ)

பெருநாள் தொழுகையை நிறைவு செய்த  பிறகுதான் குர்பானியை நிறைவேற்றவேண்டும்.


அறுக்கும் முறை

அறுக்கும் முன்பு

 இன்னீ வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ ஃபதரஸ்ஸமாவாத்தி வல்அர்ழ ஹனீஃபன் முஸ்லிமன் வமா அனா மினல் முஷ்ரிகீன் இன்ன ஸலாத்தீ வ நுஸுக்கீ வ மஹ்யாய வமமாத்தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன் 

என்ற துஆவை ஓதிக் கொள்ள வேண்டும் பிறகு குர்பானி பிராணியின் முகத்தை மேற்கு பக்கமாக திருப்பி அல்லாஹும்ம ஹாதா மின்க வ இலைக பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அறுக்க வேண்டும். 


அறுத்த பிறகு

 அல்லாஹும்ம ஹாதா மின்க வ லக வதகப்பல் மின்னீ   கமா தகப்பல்த மின் கலீலிக இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் வமின் ஹபீபிக்க முஹம்மதன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று ஓதிக்கொள்ள வேண்டும்.


குர்பானி எத்தனை நாட்கள்

நிறைவேற்றலாம்?

நபிகளார் ஸல்லில்லாஹி அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்,

குர்பானி பெருநாள் மற்றும் பெரு நாளுக்குப் பிறகு இரண்டு நாட்களாகும் .

இந்த ஹதீஸின் அடிப்படையில் பிறை 10, 11, 12. மஃரிப் வரை குர்பானியை நிறைவேற்றலாம். என இமாம் அபூ ஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஜூபைர் இப்னு முத்இம் ரழியல்லாஹு அறிவிக்கிறார்கள்-

"தஷ்ரீக் உடைய நாட்களிலும் சூர்பானி உண்டு" [அஹ்மது]

இந்த ஹதீஸின் அடிப்படையில் தஷ்ரீக் உடையான பிறை 10. 11, 12, 13, மஃரிப் வரை  குர்பானியை நிறைவேற்றலாம் என இமாம்ஷாபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்  கூறியுள்ளார்கள்:

முதல் நாளில் குர்பானியை நிறைவேற்றுவது சிறந்தது என அனைத்து இமாம்களும் கூறுகிறார்கள்.


குர்பானிபிராணிகள்

ஆடு மாடு ஒட்டகம்

ஆடு ஒரு வருடம் பூர்த்தியாகி இருக்கவேண்டும்

 மாடு இரண்டு வருடம் பூர்த்தியாகி இருக்க வேண்டும்

 ஒட்டகம் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாக  வேண்டும்




கருத்துகள்

கருத்துரையிடுக