இடுகைகள்

தியாகத் திருநாள் நினைவுகள், குர்பானியின் சட்டங்களும் விதிமுறைகளும்.

தியாகத்திரு நாள் , குர்பானியின் சட்டங்களும் விதிமுறைகளும் .

 தியாகத் திருநாள் நினைவுகள், குர்பானியின் சட்டங்களும்  விதிமுறைகளும். சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் நபி இப்றாகிம் (அலை) அவர்களுக்கு அவரின் என்பதாவது வயோதிகப் பருவத்தில் நபி இஸ்மாயில் (அலை) அவர்கள் பிறந்தார்கள். பின்னால் ஒரு சோதனைக்காக அல்லாஹ் நபி இப்றாகிம் (அலை) அவர்களிடம் "அவரின் அருமை மனைவியார் ஹாஜரா அலை) அவர்களையும் பச்சிளம் குழந்தை நபி இஸ்மாயில் (அலை) அவர்களையும் மனித சஞ்சாரமற்ற மக்கா பாலைவனத்தில் விட்டு விட்டு வரும்படி" கட்டளையிட்டார். நபி இப்றாகிம் (அறை) அவர்களும் அவ்வாறே செய்தார்கள். சிறிது காலத்திற்குப் பின் மேலும் அவர்களை சோதிக்க நாடிய அல்லாஹ். ஏழு வயதைக் கடந்த பாலகர், செல்வப் புதல்வர் தவமிருந்து பெற்ற மகன் நபி இஸ்மாயில் (அலை) அவர்களை தனக்காக (அல்லாஹ்விற்காக) அறுத்துப் பலியிடும்படி கனவின் மூலம் நபி இப்றாகிம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். மூன்று முறையும் ஒரே விதத்தில் கண்ட கனவை அது அல்லாஹ்வின் உத்திரவு தான் எனப் புரிந்து கொண்ட நபி இப்றாகீம் (அலை) அவர்கள் அதைப் பற்றி தம் இளம் மகன் நபி இஸ்மாயில் (அலை) அவர்களஎடுத்துக் கூறி புரியவைத்து அவரின் சம்மத்துடனும